Latestமலேசியா

சிரம்பானில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; 4ஆம் படிவ மாணவன் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஆக 29 – சிரம்பான் அம்பாங்கானில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி காலை மணி 7.20 அளவில் 14 வயது மாணவியை கற்பழித்தாக 4ஆம் படிவ மாணவன் ஒருவன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் சைபுல் சயோதி (Saiful Sayoti ) முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அந்த 16 வயது மாணவர் மறுத்தார்.

இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டுக்கும் குறைந்த அல்லது 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனையும் சவுக்கடியும் விதிக்கப்படலாம்.

அந்த மாணவனுக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!