
சிரம்பான், ஏப் 18 – துரித உணவகத்தில் உணவு கையாள்பவர் நீண்ட நகங்களை வைத்திருந்ததற்காக இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. 42 வயதான உணவு கையாள்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் Nurul Azuin Mohamad Talhah இந்த அபராதத்தை விதித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம்தேதி காலை மணி 9.55 அளவில்
சிரம்பானில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப் பத்திரிகையில தெரிவிக்கப்பட்டது.
உணவு சுகாதார விதிமுறைகள் 2009 இன் பிரிவு 33(1)(a) யின் கீழ் துணை விதி 33(2) இன் கீழ் உணவு கையாள்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சிரம்பான் மாவட்ட சுகாதார அலுவலக உதவி சுற்றுச்சூழல் அதிகாரி முகமட் யூஸ்ரி @ முகமட் யூசோஃப் தலைமையில் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.