
ஷா அலாம், ஏப் 28 – சிறார் பராமரிப்பு மையங்களை பதிவு செய்வதற்கு கூடியபட்சம் 5,000 ரிங்கிட் உதவியை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு சவால்கள் மற்றும் விவகாரங்களால் சிலாங்கூரில் 100க்கும் மேற்பட்ட சிறார்கள் பராமரிப்பு மையங்கள் பதிவு இல்லாமலேயே செயல்பட்டு வருவதாக மகளிர் மேம்பாடு மற்றும் சமூகநலத்துறைக்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Anfaal Saari தெரிவித்திருக்கிறார்.
5,000 ரிங்கிட் மானியம் பெற தகுதியுள்ள குழந்தை பராமரிப்பு மையங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த வாரம் பராமரிப்பு மைய மானியம் , தொழில்நுட்ப மற்றும் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றதோடு , இதில் RM400,000 நிதி ஒதுக்கப்பட்டது
இருப்பினும், திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட பாதுகாப்புக்கான விண்ணப்பங்கள் ஊராட்சி மன்றங்களால் மதிப்பிடப்படும்.
சிறார் பராமரிப்பு இடத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டால், அவர்கள் வேறு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது இதர இடங்களை பரிந்துரைக்க வேண்டுமென இன்று சிலாங்கூர் பராமரிப்பு நல 2025 (XCare) திட்டத்தைத் தொடக்கிவைத்த பின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பகல்நேர சிறார் பராமரிப்பு மையங்கள் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய விவகாரங்களில், அனைத்து பராமரிப்பாளர்களும் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்வதும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாநில சுகாதாரத் துறை, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஜே.கே.எம் போன்ற நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இவற்றில் அடங்கும் என்று Anfaal Saari தெரிவித்தார்