
சிட்னி, ஜூலை 30 – கடந்த புதன்கிழமை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் YouTube ஐ பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 37 சதவீதத்தினர், தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை கண்ணுற்றதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன என்றும் அதனைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் மெட்டாவின் பேஸ்பூக் (Facebook), இன்ஸ்டாக்ராம் (Instagram), ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் டிக்ட்டாக் (TikTok) போன்ற பிற சமூக ஊடக நிறுவனங்கள், youtube தடைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலிய குழந்தைகள் சமூக ஊடக தளங்களால் பாதிக்கப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தடையை மீறுபவர்கள் 32.2 மில்லியன் ஆஸ்திரேலியா டாலரை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.