
குவாந்தான், செப்டம்பர் -21- வெறும் 300 ரிங்கிட் முதலீட்டில் ஆறே மணி நேரங்களில் 10,000 ரிங்கிட் இலாபத்தைப் பார்க்கலாமென்ற, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி மோசம் போயுள்ளார் குவாந்தானைச் சேர்ந்த ஒரு முதியவர்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முகநூலில் பார்த்த விளம்பரத்தால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளார்.
வேறெங்கும் அந்த அளவுக்கு இலாபம் கிடைக்காது என நினைத்தவர், செப்டம்பர் 10 முதல் 19 வரை, 8 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 134,165 ரிங்கிட் பணத்தைப் போட்டுள்ளார்.
அது அத்தனையும் அவரின் சேமிப்புப் பணமாகும்.
இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அம்முதியவர் போலீசில் புகார் செய்துள்ளார்.