Latestமலேசியா

சிலாங்கூர் நீர்வீழ்ச்சியில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்

சிலாங்கூர், அக்டோபர் 21 – சிலாங்கூர், பத்தாங் காலி (Batang Kali), கம்போங் ஹுலு ரெனிங் (Kampung Hulu Rening) பகுதியிலுள்ள லூபுக் துப்பாய் நீர்வீழ்ச்சியில் (Air Terjun Lubuk Tupai) குளித்துக் கொண்டிருந்த இருவர், இன்று வேகமாகப் பாய்ந்து vantha நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆறு பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்திற்குச் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவர் நீர்வீழ்ச்சியில் குளித்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால், சுமார் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

தற்போது 10 மீட்புப் பணியாளர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!