Latestமலேசியா

சிலாங்கூர் பள்ளிகளில் ஜனவரி முதல் அக்டோபர் வரை 1,200-க்கும் மேற்பட்ட பகடிவதை, குற்றச் செயல் சம்பவங்கள்

ஷா ஆலாம், அக்டோபர்-27,

சிலாங்கூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் பகடிவதை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் பள்ளி மாணவர்களை உட்படுத்திய 1,200-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 954 சம்பவங்கள் குற்றச் செயல்கள் தொடர்பானவை; 265 சம்பவங்கள் பகடிவதைகளாகும் என, சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் Mohd Zaini Abu Hassan கூறினார்.

மொத்தமாக 41 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

என்ற போதிலும், சிலாங்கூரில் 994 பள்ளிகளில் சுமார் 100,000 மாணவர்கள் பயில்வதுடன் ஒப்பிடும் போது, கிடைத்துள்ள புகார்களின் எண்ணிக்கை குறைவே என்றார் அவர்.

ஓரிரு சம்பவங்களின் தன்மையைப் பொருத்து சில நேரங்களில் சிலாங்கூர் பள்ளிகளில் நிலைமை மோசமாகியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

எது எப்படி என்றாலும், பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை நிலைநிறுத்துவது அனைவரது கூட்டு முயற்சியாகும் என அவர் சொன்னார்.

SMK Shah Alam இடைநிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்ற போலீஸுடனான ஒன்றுகூடலுக்கும் பிறகு அவர் அவ்வாறு பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!