
சாந்தியாகோ, மே-10- தென்னமரிக்க நாடான சிலியில் சிறிய இரக அம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமையன்று அந்நாட்டின் மத்தியப் பகுதியிலிருந்து வடக்கே பயணமான போது கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை அது இழந்தது.
இதையடுத்து தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில், தலைநகர் சாந்தியாகோவுக்கு வெளியே சிறு பட்டணத்தில் அவ்விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.