Latestமலேசியா

சீனாவில் RM57,000 மதிப்புள்ள நகைகளை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய இளம் பெண்; குடும்பத்தினர் அதிர்ச்சி

பெய்ஜிங், மார்ச் 6-

சீனாவின் போஷானில் (Foshan) ஒரு இளம் பெண் 100,000 யுவான் அதாவது (57,143 ரிங்கிட் ) மதிப்புள்ள நகைகள் கொண்ட பையை குப்பை என்று கருதி குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்ததால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர் என்று Oriental Daily செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

காபி மேசையில் ஒரு பை இருந்ததை பிப்ரவரி 27 ஆம்தேதி காலையில் அப்பெண் பார்த்துள்ளார்.

குப்பைகள்தான் அப்பையில் இருப்பதாக நினைத்து அவர் தனது குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் அதனை தூக்கி வீசியிருக்கிறார்.

அன்றைய தினம் இரவு 8மணிக்கு தனது நகைகளை வைப்பதற்கு குடும்ப உறுப்பினர் முயன்றபோதுதான் வீட்டில் காப்பி மேசையில் இருந்த பை காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

அந்த பையில் மேலும் சில பொருட்களுடன் 80 கிரேம் எடையுள்ள தங்க necklace ஒன்றும் இருந்துள்ளது என தெரியவந்தது.

குப்பைத் தொட்டிக்கு சென்று தேடும் நடவடிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

அதற்குள் குப்பை லோரி அந்த குப்பைகளை சேகரித்து அதனை அப்புறப்படுத்தும் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதால் அவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!