
சுங்கை பூலோ, செப் -30,
அந்த டிரெய்லர் லோரி U Turn செய்ய முயற்சித்து, பின்னோக்கிச் நகர்ந்தபோது , சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை மோதுவதைக் காட்டும் ஒரு நிமிடம் 32 வினாடிகள் கொண்ட டேஷ்போர்ட் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
U Turn எடுப்பதை தடைசெய்யும் எச்சரிகை அறிவிப்பு பலகையுடன் இருக்கும் சாலை சந்திப்பு இடத்தில் அந்த டிரெய்லர் லோரி திடீரென வளைவதற்கு முயற்சிப்பதை அந்த வீடியோவுல் தெளிவாகக் பார்க்க முடிகிறது.
கிள்ளானைச் சேர்ந்த அந்த டிரெய்லர் ஓட்டுனர் தவறுதலாக திரும்பக்கூடாத பாதையில் வளைந்து மீண்டும் அந்த வாகனத்தை பின்னால் நகர்த்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என சுங்கைபூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Hafiz Muhammad தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து டிரெய்லர் லோரி ஓட்டுநரும், கார் உரிமையாளரும் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக Mohamad Hafiz குறிபிட்டார்.