
சுங்கை பூலோ, மே-22 – சிலாங்கூர், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்ட வீட்டில் மூவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர்.
இன்று காலை 6.30 மணியளவில் 16-ஆவது மாடியில் அச்சம்பவம் ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறைத் தலைவர் வான் மொஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து 8 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
எனினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டிலிருந்த மூவரும் வெளியே ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், அவ்வீடு 80 விழுக்காடு சேதத்தைச் சந்தித்துள்ளது.