
கோலாலம்பூர், மே 30 – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பரதநாட்டிய பண்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், “மறவன் 2025” எனும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜூன் 5 ஆம்தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறும்.
இந்த விளையாட்டுப் போட்டியில் மரதோன், பூப்பந்து, காற்பந்து ஆகியவை இடம் பெறும்.
இப்போட்டிகள் அனைத்தும் (கெம்பஸ் சுல்தான் அஸ்லான் ஷா) உப்சி அரெனாவில் நடைபெறவிருக்கிறது.
இப்போட்டியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், தொழில் கல்லூரிகள் ஆகியவை கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றன.
இவற்றின் மூலம் இளைஞர்களின் உடல் நலமும் ஒத்துழைப்பு மனப்பாங்கும் ஊக்குவிக்கப்படுவதோடு, பல்கலைக்கழகங்களுக்கு
இடையிலான நல்லிணக்கமும் மேலும் வலுவடையும்.
இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் இந்த நிகழ்விற்கான நன்கொடை அல்லது ஊக்குவிப்பு ஆதரவு வழங்க விருப்பமுள்ளவர்கள் நிகழ்வின் இயக்குனரான செல்வன் கீர்த்தனன் பன்னிர்செல்வத்தை கீழ்காணும் எண்களில் தொடர்புக் கொள்ளலாம அல்லது instagaram-மில் maravan_2025 மூலம் மேல் விவரங்களையும தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.



