
செகாமாட், ஆகஸ்ட் 5 – நேற்று, ஜாலான் செகாமாட் குவாந்தான், கிலோமீட்டர் 13 இல் நடந்த விபத்தொன்றில் கணவர் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பகாங் பெக்கானிலிருக்கும் தங்கக் கடை ஒன்றின் உரிமையாளரான அக்கணவன் மனைவி இருவரும் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி சென்று மின் கம்பங்களில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்று செகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், அகமது ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சம்பவத்தின் போது கனத்த மழை பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காரில் சிக்கிக்கொண்ட இருவரையும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயணைப்பு துறையினர் மீட்டனர் என்று செகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முஹத் ஹாசிம் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரை உடனடியாக அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.