
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மற்றும் தரை பொது போக்குவரத்து நிறுவனமான APAD-டுக்கு அவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிகழ்ந்த அவ்விபத்தில், ஒரு குடும்பம் பயணித்த வேனை ட்ரேய்லர் மோதி மூத்த தம்பதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
ட்ரேய்லர் ஓட்டுனர் மெத்தாம்பெட்டமின் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆக, கட்டொழுங்கற்ற ஓட்டுநர்களின் செயல்களுக்கு, அந்தந்த நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டுமென அந்தோணி லோக் கூறினார்.
இவ்வேளையில், போலீஸாரும் விசாரணையை விரைந்து முடித்து, அந்த ட்ரேய்லர் ஓட்டுநரை நீதியின் முன் நிறுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அந்தோணி லோக், முன்னதாக விபத்தில் படுகாயமடைந்து செகாமாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவரை நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார்.
அதில், நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான J. அருள்குமாரும் உடன் சென்றார்.



