
சிரம்பான், ஆகஸ்ட் 12 – நேற்று செனாவாங் தாமான் ஸ்ரீ பாகியிலுள்ள (Taman Sri Pagi) வீட்டின் முன்புறத்தில் ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 31 வயதான உள்ளூர் நபரை, பொதுமக்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
நேற்று மாலை 28 வயதான அப்பாதிக்கப்பட்டவர் வீட்டு வாசலில் இரத்த வெள்ளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப விசாரணையில், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் Mohamad Hatta Che Din தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களின் உதவியுடன் சந்தேக நபரை போலீசார் கைது செய்து, குற்றத்தில் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் சந்தேக நபருக்கு இன்று காலை முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.