சென்னை, நவம்பர்-21, IndiGo விமான நிறுவனம், சென்னை – பினாங்கு இடையில் நேரடி பயணச் சேவையின் வாயிலாக மலேசியாவுக்கான தனது சேவையை விரிவுப்படுத்துகிறது.
அப்புதிய நேரடி பயணச் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்.
ஏற்கனவே சென்னை – கோலாலம்பூர் மற்றும் சென்னை – லங்காவி என இரு நேரடி பயணச் சேவைகளை வழங்கி வரும் IndiGo, மலேசியாவில் மூன்றாவது இடமாக பினாங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இப்புதிய நேரடி பயணச் சேவையானது, சென்னை – பினாங்கு ஆகிய 2 நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்யும்.
சுற்றுலா மற்றும் வர்த்தகப் பயணிகளுக்கு வசதியான மற்றும் கட்டுப்படியான பயண அனுபவத்தை இப்புதியச் சேவை வழங்குமென, அறிக்கையொன்றில் IndiGo உத்தரவாதமளித்தது.
இப்புதியச் சேவையையும் சேர்த்தால், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வாரம் 28 விமானப் பயணங்களை அந்நிறுவனம் இயக்குகிறது.
சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தவும் இதன் மூலம் வாய்ப்பேற்பட்டுள்ளதாக IndiGo நம்பிக்கைத் தெரிவித்தது.