Latest
செப்டம்பர் 1 முதல் VIP தகடு எண்களுக்கு ஆன்லைனில் ஏலம் – JPJ அறிவிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் mySIKAP ஆன்லைன் போர்டல் வாயிலாக VIP சிறப்பு பதிவு எண்களை பெற்றுக் கொள்ள இயலுமென்று JPJ அறிவித்துள்ளது.
விற்பனைக்கு செல்லாமல் மீதமிருக்கின்ற VIP எண்களை பொதுமக்கள் வாங்கி கொள்வதற்கான அரிய வாய்ப்பினை JPJ ஏற்பாடு செய்துள்ளது.
முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் இந்த ஏலத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது JPJ கணக்கை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் mySIKAP போர்ட்டல் வழியாக விண்ணப்பிக்குமாறு சாலைப் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.