
செமினி , மே 9 – செமினியில் போலீஸ்போல் நடித்து 5 தனிப்பட்ட நபர்கள் ஒருவரிடம் கொள்ளையிடும் சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செமினி வட்டாரத்தில் விடியற்காலை மணி 5.02 அளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) தெரிவித்திருக்கிறார்.
அந்த ஐந்து சந்தேகப் பேர்வழிகளும் கொள்ளையிட்ட வீட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய ஓய்வு பெற்ற நபர் ஆவார்.
அந்த கொள்ளையர்களில் மூவர் முகக் கவரியையும், இதர இருவர் போலீஸ் மேலாடையையும் அணிந்திருந்தாக சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் காணமுடிந்தது. அவர்கள் வீட்டின் முன்கதவை உடைத்து அவ்வீட்டிற்குள் புகுந்துள்ளனர் என நஸ்ரோன் கூறினார்