
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1- செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மாய்சூரியில் நேற்று முன்தினம் இரவு 7 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில், அதன் வளர்ப்புத் தாய் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாதுவும் அவரின் கணவரும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இருவருக்கும் பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லையென, செராஸ் போலீஸ் துணைத் தலைவர் Ridzuan Khalid தெரிவித்தார்.
குழந்தையின் மரணத்திற்கானக் காரணம் தொடர்ந்து விசாரணையில் உள்ளதாக அவர் சொன்னார்.
அடுக்குமாடி வீட்டில் அந்த பெண் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி, பேச்சு மூச்சின்றி கிடப்பதாக 50 வயது ஆடவர் முன்னதாக புகார் செய்தார்.
போலீஸ் வந்து பார்த்த போது குழந்தையின் உடலில் வீக்கங்களும் காணப்பட்டதால், சந்தேகத்தில் அந்நபரும் அவரின் 38 வயது மனைவியும் கைதுச் செய்யப்பட்டனர்.