Latestமலேசியா

சேமப்படை பங்கேற்பாளர் சம்சூல் ஹரிஸ் மரணம்; சேமப்படையின் 3 பயிற்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு

கோத்தா திங்கி ,பிப்ரவரி -27 -கடந்த ஆண்டு சேமப்படை பங்கேற்பாளர் சம்சுல் ஹரிஸ் சம்சுடினுக்கு (Syamsul Haris Shamsudin) மரணம் விளைவித்ததாக (PALAPES) எனப்படும் சேமப்படையின் மூன்று பயிற்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேஜர் முகமட் அஸ்மி கமாருடின் ( Mejar Mohd Azmi Abu Bakar ) கேப்டன் முகமட் பஹாவ்டின் அப்துல் ரஷிட் ,( Mohammad Bahauddin Abdul Rashid ) , வாராண்ட் அதிகாரி நோர்புவாங்கனி மிஷியான் ( Norbuangani Mislan ) ஆகியோருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹேடா பரிட்ஷால் அபு ஹசான்( Hayda Faridzal abu Hasan ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

UTM பல்கலைக்கழகத்தின் (PALAPES) உறுப்பினரான Syamsul லுக்கு மரணம் ஏற்படும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டைமேஜர் முகமட் அஸ்மி, கேப்டன் Mohammad Bahauddin, Norbuagani ஆகியோர் மறுத்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி உலுத் திராம் உத்தாராவில் Lapang Sasar என்னுமிடத்தில் அம்மூவரும் இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 304ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் 25,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டதோடு அவர்களது கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீண்டும் ஏப்ரல் 13ஆம் தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!