
ஜப்பானில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்து மூவரின் உடல்கள் கண்டுபிடிப்பு
தோக்யோ, பிப்ரவரி-19,
ஜனவரி மாதம் ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் உள்ள மவுண்ட் அசோவின் எரிமலை பள்ளத்தில் விபத்திற்குள்ளான சுற்றுலா ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்களை மீட்பதற்காக நடவடிக்கையில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருவதாக கியோட்டோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் சவாரிகளை வழங்கும் அசோ நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலை மற்றும் நீர்ப் பூங்காவான கட்லி டொமினியனில் (Cuddly Dominio) இருந்து ஜனவரி 20 ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் புறப்பட்டபோது அது விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
அச்சம்பவத்தின்போது தைவானைச் சேர்ந்த ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் என இரண்டு பயணிகளும் 64 வயதான ஜப்பானிய ஹெலிகாப்டர் ஓட்டுநரும் அதில் இருந்தனர்.



