“ஜப்பானை விட்டு வெளியேறு” – மலேசிய ஆசிரியருக்கு வந்த வெறுப்புச் செய்தியால் பரபரப்பு; குவியும் ஆதரவும் கண்டனமும்

தோக்யோ, நவம்பர்-13, ஜப்பானின் யோக்கோஹாமாவில் பணியாற்றும் மலேசிய ஆசிரியர் Banden Tong, தனது வீட்டின் கதவிலும் காரிலும் ஒட்டப்பட்ட ஒரு வெறுப்புச் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
“வெளிநாட்டவர்களே, ஜப்பானை விட்டு வெளியேறுங்கள். இங்கு உங்களுக்கு இடமில்லை” என ஜப்பானில் எழுதப்பட்ட அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வைரலாக பரவ, 800-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன.
பெரும்பாலான ஜப்பானியர்கள் இந்தச் செயலை கண்டித்து, மலேசிய ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சம்பவம், ஜப்பானில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக வளர்ந்து வரும் மனப்பான்மையை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.
ஆனால், இச்சம்பவத்தால் ஜப்பான் மீதான Banden Tong-கின் அன்புக் குறையவில்லை.
“மலேசியாவை அடுத்து இது என விரும்பும் நாடு” என அவர் கூறினார்.



