
ஜெர்மனி, நவம்பர் 11 – ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தனது கடுமையான பணிச்சுமையைக் குறைப்பதற்காக, இரவு வேலையின்போது, தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் 10 நோயாளிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட செவிலியருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை வெளியிட்ட தீர்ப்பில், குற்றத்தின் தீவிரத்தினால் 44 வயதுடைய அக்குற்றவாளி, 15 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவித்த பிறகும், ‘parole’ என்றழைக்கப்படும் நிபந்தனைகளுடன் கூடிய விடுதலையைப் பெற தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
2023 டிசம்பர் முதல் 2024 மே மாதம் வரை, ஜெர்மனியிலிருக்கும் மருத்துவமனையில் இரவு வேளைகளில் பணிபுரிந்துக் கொண்டிருந்த குற்றவாளி, நோயாளிகளுக்கு நிவாரண மருந்துகளும் வலி நிவாரண மாத்திரைகளும் சேர்த்து கொடுத்ததன் விளைவால் 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூடுதல் குற்றச்சாட்டுகள் பின்னர் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



