Latestமலேசியா

ஜேய் ச்சாவ் இசை நிகழ்ச்சி நடந்த புக்கிட் ஜாலில் அரங்கிற்கு வெளியே பெண்ணுக்குக் குழந்தைப் பிரசவம்

கோலாலம்பூர், அக்டோபர்-27, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் தைவானிய பாப் இசைப் பாடகர் Jay Chou-வின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே பெண்ணொருவர் குழந்தைப் பிரசவித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமை மாலை அரங்கிற்கு வெளியே காத்திருந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

சுகப்பிரசவம் ஆனதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதை வைரலான வீடியோவில் காண முடிந்தது.

பிறகு தாயும் சேயும் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படுவதும் வீடியோவில் தெரிந்தது.

ஒருவேளை பிறந்தது ஆண் குழந்தையென்றால், Jay Chou-வின் சீனப் பெயரான Jie Lun-னையே பெயராக வைத்துவிடும்படி வலைத்தளவாசிகள் அப்பெண்ணுக்கு ஆலோசனைக் கூறினர்.

Jay Chou-வின் Carnival World Tour தொடரின் ஒரு பகுதியாக அந்த இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலிலில் நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!