மெர்சிங், செப்டம்பர் -27, ஜோகூர், மெர்சிங்கில் ஒருவரை மிதித்தே கொன்ற காட்டு யானையைத் தேடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Felda Tenggaroh Timur 1-ரில் நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் மேலுமொருவர் படுகாயமுற்றார்.
அப்பகுதி வாழ் கிராம மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த காட்டு யானையை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, யானையைத் தீவிரமாகத் தேடி வருவதாக மாநில அரசு கூறியது.
முன்னதாக ஃபெல்டா குடியேற்றப் பகுதியிலுள்ள பள்ளியொன்றின் பின்புறம் தனியாகச் சுற்றி வந்த யானையை, பள்ளித் துப்புரப் பணியாளர்கள் இருவர் குச்சியால் விரட்டினர்.
இருப்பினும் துப்புரவு பணியாளர்களின் அலறல் மற்றும் யானையை பயமுறுத்துவதற்கான ஆக்ரோஷமான முயற்சிகளால் யானை ஆவேசமடைந்து இருவரையும் தாக்கியது.