
பத்து பஹாட், செப்டம்பர்-27,
ஜோகூர், பத்து பஹாட் கரையோரத்தில் இன்று அதிகாலை 9.04 மணிக்கு ரிக்டர் ( Richter) அளவைக் கருவியில் 3.5-தாக பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MET Malaysia அதனை உறுதிப்படுத்தியது.
பத்து பஹாட்டுக்கு தென்கிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் அந்த வலுவற்ற நில நடுக்கம் பதிவானது.
இதையடுத்து சுற்றுவட்டாரத்தில் தொடர் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.
இதனால் சுனாமி எச்சரிக்கையும் இல்லை என MET Malaysia கூறிற்று.
என்றாலும் நிலவரங்களை அணுக்கமாக அது கண்காணித்து வருகிறது.