Latestமலேசியா

ஜோகூர் செனாயில் சாய தொழிற்சாலையின் கிடங்கில் தீ; மூவர் காயம்

கூலாய், ஏப் 25 – செனாயில் , தாமான் தேசா இடமானில் சேதமடைந்த வண்ணப்பூச்சு அல்லது பெய்ன்ட் கிடங்காக பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஆடவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

நேற்று பிற்பகல் மணி 2.13 அளவில் நடந்த இந்த சம்பவத்தில், அருகிலுள்ள இரண்டு வளாகங்கள், அதாவது ஒரு பட்டறை மற்றும் ஒரு கட்டுமானப் பொருட்கள் கடை ஆகியவை 50 விழுக்காடு சேதம் அடைந்தன. கூடுதலாக, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியிருந்த ஐந்து கார்கள் மற்றும் ஒரு லாரியும் அழிந்தன.

பெயிண்ட் கடையின் ஊழியர்கள், இரண்டு உள்நாட்டினர் மற்றும் ஒரு வெளிநாட்டவர், தீக்காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குறிப்பிட்ட மூன்று வளாகங்களிலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது, அதே நேரத்தில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஐந்து கார்கள் மற்றும் ஒரு லாரியும் முற்றிலுமாக எரிந்தன என பண்டார் கூலாய் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் பவ்சி அவாங் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

மேலும் தீவிபத்துக்குள்ளான இடத்தில் இரசாயனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லையென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!