
ஜோகூர் பாரு, ஜூலை 31 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர் தாமான் செந்தோசாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவர், 30 ஆண்டுகளாக சேகரித்து வைத்த 32 டன் குப்பைகளை ஜோகூர் ஊராட்சி மன்றம் (MBJB) துப்புரவாக அகற்றியுள்ளது.
70 வயதான அந்த ஆசிரியர் பொழுதுபோக்கு என்ற பெயரில் தனது வீட்டை ஒரு குப்பைத் தொட்டியாக மாற்றியதோடு, துர்நாற்றம் மிகுந்த அந்த குப்பைகளால் அண்டை வீட்டார்களுக்கு பெரும் அசெளகரியத்தையும் ஏற்படுத்தியிருந்தார்.
குப்பைகள் அந்த வயோதிகரின் வீட்டை ஆக்கிரமித்துவிட்டதால், அவர் பின்புறம் ஒரு சந்துக்குள் தூங்கி எழுகிறார் என்றும் அவரின் கார் முழுவதுமாக குப்பையில் புதையுண்டு விட்டதாக அண்டை வீட்டுக்காரர்கள் கூறியுள்ளனர்.
தன்னார்வலர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுத்ததோடு 1,000 ரிங்கிட்டை திரட்டி அந்த ஆதரவற்ற முன்னாள் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.