
கெப்பொங், ஜூலை 17 – கோலாலம்பூர் கெப்பொங் பகுதியில் வாகன நிறுத்துமிடமொன்றில், இரட்டை வாகனங்களை நிறுத்தி வைத்த தகராறில் வாகன ஓட்டுனரை தலைகீழாக கவிழ்த்த காணொளி வலைத்தளத்தில் வைரலாகி போலீசாரின் பார்வைக்கு எட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தமது துறைக்கு புகார் கிடைத்ததாக செந்தூல் காவல்துறைத் தலைவர் சுகர்னோ ஜஹாரி தெரிவித்துள்ளார்.
கார் ஓட்டுநரிடம் அச்சந்தேக நபர் நடுவிரலைக் காட்டும் அருவருக்கத்தக்க காட்சியை அந்த காணொளியில் காண முடிகின்றது.
இச்சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல்கள் தெளிவாக கண்டறியப்படாத நிலையில் போலீசார் தற்போது அந்நபரை வலை வீசி தேடி வருகின்றனர் என்று சுகர்னோ கூறியுள்ளார்.