Latestமலேசியா

டாஷ்காம் காட்சியில் பதிவு: வேன் திடீர் வழி மாற்றம் — மூன்று வாகனங்கள் விபத்து

டாஷ்காம் காட்சியில் பதிவு: வேன் திடீர் வழி மாற்றம் — மூன்று வாகனங்கள் விபத்து

கோலாலம்பூர், பிப்ரவரி 20 –

தம்பூன் (Tambun) டோல் வெளியேறும் பகுதியில் நேற்று நடந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கு, ஒரு வெள்ளை நிற வேன்தான் காரணமென்ற உண்மை டாஷ்காம் காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியில், அனுமதி இல்லாத வழியில் திடீரென பாதையை மாற்றிய வேன், நேராக சென்று கொண்டிருந்த சாம்பல் நிற டொயோட்டா ஹைலக்ஸுடன் (Toyota Hilux) மோதுவதைக் காண முடிந்தது.

அந்த மோதலின் தாக்கத்தில், சாம்பல் நிற ஹைலக்ஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த நீல நிற ஹைலக்ஸுடன் மோதியது. பின்னர் சாம்பல் நிற வாகனம் சாலையோர கால்வாயில் விழுந்ததைத் தொடர்ந்து நீல நிற ஹைலக்ஸ் சாலையில் கவிழ்ந்து தரை புரண்டது.

கடுமையான விபத்து ஏற்பட்ட போதிலும், வேனுக்கு மிகச் சிறிய சேதமே ஏற்பட்டதாகவும், அது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் காணப்படுகிறது.

மலேசிய சாலைகளில் ஆபத்தான ஓட்டுநர் நடத்தைகளை டாஷ்காம் காட்சிகள் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து வருவது சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் பொறுப்புணர்வு குறித்து கவலைகளை அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!