
டென்னசி, மே-30 – அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மெக்டானல்ட் டிரைவ்-துரு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்த தம்பதிக்கு 3 பைகளில் ரொக்கப் பணம் கிடைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
டிரைவ்-துருவில் ஆர்டர் செய்த உணவுகள் பொட்டலங்களில் தரப்பட்டதும் அவர்கள் நேராக வீடு திரும்பினர்.
வீட்டில் பொட்டலங்களைத் திறந்து பார்த்த போது கணவனும் மனைவியும் வாயடைத்துப் போயினர்.
ஆயிரக்கணக்கான டாலர் ரொக்கம் அடங்கிய 3 பைகள் அதிலிருந்தன.
உண்மையில் அந்த டிரைவ்-துரு உணவகத்தின் முதல் நாள் வியாபாரப் பணம் அதுவாகும்.
வங்கியில் போடப்படுவதற்காக வைத்திருந்த அப்பணத்தை, டிரைவ்-துரு பணியாளர் சரியாக கவனிக்காமல் உணவவோடு உணவாக சேர்த்து அந்த தம்பதியிடம் எடுத்து கொடுத்து விட்டார்.
தவற்றை உணர்ந்தவர், சட்டென கிளம்பி அத்தம்பியின் டிரக்கை துரத்தி அவர்களின் வீட்டை கண்டு பிடித்தார்; சில நிமிட தூரத்தில் மட்டுமே வீடு இருந்ததால் வசதியாகிப் போனது.
உண்மைமை விளக்கிச் சொன்னதும் அத்தம்பதி பணத்தை முழுவதுமாக ஒப்படைத்தனர்.
அந்த வாடிக்கையாளர் தம்பதியின் செயலுக்கு மெக்டானல்ட் டிரைவ்-துரு மேலாளர் நன்றித் தெரிவித்தார்.