Latestமலேசியா

டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல – பொதுப் பணி அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 29 – டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதோடு இதனால் அரசாங்கம் பெரிய அளவிலான நிதி விளைவை எதிர்நோக்க நேரிடும் என்பதை பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி ( Datuk Seri Alexander Nanta Linggi ) தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் டோல் கட்டணத்தை ரத்துச் செய்வது எளிதானதல்ல என்ற கருத்து அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் கூறினார். டோல் கட்டணம் ரத்து செய்யப்பட்டால், நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் வேலைகளை செய்ய அரசாங்கம் பெரிய நிதி வளத்தை கண்டறிய வேண்டும்.

மேலும் இந்த நோக்கத்திற்காக பெரிய அளவில் பில்லியன் கணக்கான ரிங்கிட் தேவைப்படுகிறது என நாடாளுமன்றத்தில் அலெக்சண்டர் நந்தா தெரிவித்தார். நெடுஞ்சாலைகளின் சுய பராமரிப்புக்காக பெரிய நிதியைப் பயன்படுத்தி அரசாங்க நிதிகள் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று நாம் கற்பனை செய்யலாம், ஆனால் இது சாத்தியமல்ல என அவர் விளக்கம் அளித்தார்.

அரசாங்கம் அமைப்பதில் வெற்றி பெற்றால் டோல் கட்டணத்தை ஒழிப்பதாக முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் வாக்குறுதி மற்றும் அது செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பெரிக்காத்தான் நேசனல் பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முகமது சுல்கிப்லி ஜூசோ ( Che Mohamad Zulkifly Jusoh ) கேள்வி எழுப்பியிருந்தார்.

டோல் கட்டணத்தை அகற்றுவது அல்லது குறைப்பதற்கான நடவடிக்கை நடைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் அது நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தது என அலெக்சண்டர் நந்தா மறுமொழி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!