Latestஉலகம்

ட்ரம்ப் உருவத்திலான எக்ஸ்டசி மாத்திரைகளால் நெதர்லாந்தில் சிவப்பு எச்சரிக்கை: ‘நிச்சயமாக உட்கொள்ள வேண்டாம்’

ஆம்ஸ்டர்டாம், ஆகஸ்ட்-30,அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் முக வடிவிலான ஆபத்தான – அதிக வீரியம் கொண்ட எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, நெதர்லாந்து நாட்டு சுகாதார அதிகாரிகள் அவசர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

​பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாத்திரைகளில் ஆபத்தான அளவுக்கு MDMA கலந்திருப்பதாகவும், இது அதிகப்படியான நச்சுத்தன்மை, மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புதுமையான வடிவங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் தயாரிக்கப்படும் இதுபோன்ற போதைப்பொருட்கள் உயிருக்கு அச்சுறுத்தலானவை எனப் போதைப்பொருள் சோதனை நிறுவனங்களும் போலீஸும் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே, ​பொது மக்கள் யாரும் இத்தகைய மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் அவற்றை ஒப்படைக்குமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!