Latestமலேசியா

தங்க விலை 10% சரிவு; வீழ்ச்சி தற்காலிகமே என நிபுணர்கள் கருத்து

கோலாலம்பூர், மார்ச்-23-முடிந்த வாரத்தில் தங்க விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் 10 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது.

1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியாகும்.

ஆனால் இது ஒரு தற்காலிக சரிவே என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயர் வட்டி விகிதங்களால் கடன், பங்கு மற்றும் வளர்ச்சிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

ஆனால் நாணயக் கொள்கை தளர்ந்ததும், தங்கம் மீண்டும் வலுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை தங்கம் அவுன்ஸுக்கு 4,477 முதல் 4,735 அமெரிக்க டாலர் வரை விற்பனையாகி, 4,509 டாலரில் முடிந்தது.

என்றாலும், ‘தங்கம் வீழ்ச்சி அடையவில்லை, அது மாற்றம் அடையும் கட்டத்தில் உள்ளது’ என SPI Asset Management நிறுவனத்தின் Stephen Innes கூறுகிறார்.

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, தங்கம் இன்னமும் பொருளாதார அசாதாரணத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகவே உள்ளது என்கிறார் அவர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!