
இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-25 – ஜோகூர், தஞ்சோங் குப்பாங் கடற்கரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 17-ஆம் தேதி கடற்கரையில் மதுபானம் அருந்திய நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியதாக, இஸ்ண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் கூறினார்.
அச்சண்டையில் உள்ளூர் நபர் ஒருவர் காயமடைந்து, தலை, உடம்பு மற்றும் கையில் காயங்களுடன் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 18 முதல் 20 வரை, 22 முதல் 37 வயதுக்குட்பட்ட அந்த 9 சந்தேக நபர்கள் ஜோகூர் பாரு வட்டாரத்தில் கைதாகினர்.
அவர்களில் 8 பேருக்கு பழையக் குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், நால்வர் கஞ்சா உட்கொண்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



