
சிரம்பான், ஏப்ரல்-22, நெகிரி செம்பிலான், சிரம்பான் 2-வில் உள்ள பேரங்காடியில், தனது ஆபாச நடவடிக்கைக்காக கர்ப்பிணி பெண்ணை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞன் வசமாக சிக்கினான்.
20 வயதிலான அவ்விளைஞன் நீண்ட நேரமாக தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாக, பாதிக்கப்பட்ட மாது சமூக ஊடகத்தில் பதிவேற்றிய வீடியோவின் கீழ் குறிப்பிட்டார்.
முதலில் எந்த சந்தேகமும் வரவில்லை; பிறகு தான் அவன் கைப்பேசியில் என்னை வீடியோ எடுப்பதை உணர்ந்தேன் என, கணவர் மற்றும் பிள்ளைகளுடன் அங்கு வந்திருந்த அவர் சொன்னார்.
ஒரு கட்டத்தில் அவனை நிறுத்தி கைப்பேசியைக் காட்ட சொல்லி கேட்ட போது, அம்மாது அதிர்ச்சியடைந்தார்.
அவருடையை பின்பக்கத்தை zoom செய்து எடுக்கப்பட்ட வீடியோ அதிலிருந்தது; அதோடு முக்காடு அணிந்த பெண்கள் உட்பட ஏராளமான கர்ப்பிணி பெண்களின் வீடியோக்களும் இருந்தன.
அது குறித்து போலீஸில் புகாரளித்து விட்டதாகக் கூறிய அம்மாது, விசாரணையில் அவன் சிரம்பான் சுற்று வட்டாரத்தில் படிக்கும் பல்கலைக்கழக மாணவன் என தெரிய வந்ததாக சொன்னார்.
சிரம்பான் போலீஸ் அச்சம்பவத்தை மேற்கொண்டு விசாரித்து வருகிறது