Latestமலேசியா

தப்பியோடிய பாகிஸ்தான் கைதி நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

சுங்கை பூலோ, ஏப்ரல்-12-​சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் நாட்டவரைப் பிடிக்க அரச மலேசியப் போலீஸ் படை தற்போது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Muhammad Hassan என்ற 24 வயது அக்கைதி, கடந்த வியாழக்கிழமை ஷா ஆலாம் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துவிட்டு மீண்டும் சிறைக்கு மாற்றப்படும்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடினான்.

சிறார் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகவும், குடிநுழைவுக் குற்றங்களுக்காகவும் அவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

​தற்போது பொது நடவடிக்கைப் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அவன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து எல்லைச் சாவடிகளிலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கடைசியாக ஆரஞ்சு நிற டி-சட்டை மற்றும் கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தான்.

பொது மக்கள் யாரும் இவனைப் பார்த்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு, சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Hafiz Muhammad Nor கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!