
சென்னை, மே-6-தமிழக அரசியலில் ஓர் அதிரடித் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் கட்சி தனது நிபந்தனை ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்களே தேவைப்படும் நிலையில் காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், விஜய்யின் கூட்டணியில் ‘மதவாத சக்திகள்’ இடம்பெறக்கூடாது என்ற முக்கிய நிபந்தனையுடன் ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் BJP அல்லது அதன் கூட்டணி கட்சிகளை விஜய் தவிர்க்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
காங்கிரஸிடம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், விஜயின் பலம் 113-ராக உயர்ந்துள்ளது; இன்னும் தேவைப்படுவது 5 இடங்கள் மட்டுமே.
மேலும் சில சிறிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அவர் முதல்வராவது எளிதாகி விடும்.
இவ்வேளையில், காங்கிரஸின் இந்த திடீர் மனமாற்றத்தால் திமுக தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது.
பதவிக்காக, கூட்டணியை முறித்துக் கொள்வதா என திமுக கடும் சினத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில், காங்கிரஸின் ராஜீவ் காந்தி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் புதிய அரசு அமைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



