Latestமலேசியா

தமிழ் பள்ளிகளுக்காக… வணக்கம் மலேசியாவின் நல்லெண்ண கோல்ஃப் போட்டி; அமோக வரவேற்பு

சுங்கை பூலோ, அக்டோபர்-6 – நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’ முதன் முறையாக கோல்ஃப் போட்டியொன்றை வெற்றிகரமாக நடத்திப் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த Vanakkam Malaysia Charity Golf Tournament 2025 போட்டி அக்டோபர் 3-ஆம் தேதி சிலாங்கூர், சுங்கை பூலோ, Kelab Rahman Putra கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்றது.

“Swing with Purpose, Play with Passion” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இப்போட்டியின் முக்கிய நோக்கமே தமிழ் பள்ளிகளுக்கும் CSR எனப்படும் வர்த்தக நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கும் நிதி திரட்டுவதாகும்.

நாடளாவிய நிலையில் நூற்றுக்கணக்கான இந்திய கோல்ஃப் வீரர்கள் உற்சாகமாகப் போட்டியில் பங்கேற்று, நட்பு மற்றும் சமூக அக்கறை நிறைந்த சூழலையும் உருவாக்கினர்.

பொதுப் பிரிவில் Kelab Rahman Putra கோல்ஃப் கிளப்பைச் சேர்ந்த Fausan சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

அவர் RM2,000 மதிப்புள்ள Panasonic 50” LED டிவி மற்றும் வெற்றியாளர் கிண்ணத்தை வென்றார்.

சீனியர் பிரிவில் கெடா, கூலிமைச் சேர்ந்த கோபால் கிருஷ்ணன் வாகை சூடினார்; அவருக்கு Fella Design Canio Stool, Vanakkam Malaysia-வின் goodie bag பரிசுப் பை மற்றும் வெற்றியாளர் கிண்ணம் வழங்கப்பட்டது.

இதுபோன்ற போட்டிகள் நடத்தி கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியைப் பங்கேற்பாளர்கள் பாராட்டியதோடு, தங்கள் அனுபவத்தையும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

போட்டியின் சிறப்பை கூட்டிய மாபெரும் அதிர்ஷ்ட குலுக்கில், RM5,000 மதிப்புள்ள Titoni கடிகாரம் மற்றும் பாலி சென்று வர இருவருக்கு RM5,000 மதிப்புள்ள சுற்றுலா பேக்கேஜும் வழங்கப்பட்டது பங்கேற்பாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அனைவரின் பங்களிப்புக்கும் நன்றியைத் தெரிவித்த வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன்,, இந்த நல்லெண்ண கோல்ஃப் போட்டியை ஆண்டு தோறும் நடத்தி, தமிழ் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் சமூக நலனுக்கும் பங்களிக்கும் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினார்.

இப்போட்டிக்கு Bridgestone Golf, Eagle Eye Golf, Panasonic Malaysia, Titoni, Iroas Leather Goods, Fella Design, Skechers Malaysia, Munchy’s, Nu Nature, Le Botanical, KSK Sports, Spectrum outdoor, Colors of India, Tejas food, Elora Global, Mike Golf and Event, Casa Seventeen Restaurant, Pearl Star Tour & Travel, Kingsman Beer உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிதி ஆதரவளித்து, அதன் வெற்றிக்கு பெரும் பங்களித்தன.

மக்களுக்கு சுடச் சுட செய்திகளைத் தருவதில் மட்டும் முன்னணி வகிக்காமல், சமூகக் கடப்பாட்டிலும் பொறுப்பிலும் வணக்கம் மலேசியா முன்னணி வகிப்பதை, இந்த முன்னெடுப்பு பறைசாற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!