இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மகன் ஊழல் புகாரில் கைது

கொழும்பு, ஜனவரி-26 – இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்ஷே ஊழல் புகாரில் கைதாகியுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்து வாங்கியதன் பேரில் போலீஸார் அவரைக் கைதுச் செய்தனர்.
2015-ஆம் ஆண்டுக்கு முன் தனது தந்தை அதிபராக இருந்த போது, முறைகேடு செய்து அச்சொத்தை வாங்கியதாக யோஷிதா விசாரிக்கப்படுகிறார்.
புதிய அதிபராக அனுர குமார திசநாயக்கே (Anura Kumara Dissanayake) நவம்பரில் பொறுப்பேற்றதிலிருந்தே, பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் ராஜபக்ஷே குடும்பம் விசாரணை வளையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷேவின் மூத்த மகன் நமல் ராஜபக்ஷே, கடந்தாண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அவரின் படுதோல்விக்கு, அவரின் தந்தை மற்றும் பெரியப்பா கோத்தபாயே ராஜபக்ஷே ஆட்சியின் போது மலிந்து கிடந்த ஊழல்கள் காரணங்களாகக் கூறப்பட்டன.
இந்நிலையில், வெளியில் அதிகம் அறியப்படாதவராய் இருந்த யோஷிதா ராஜபக்ஷே இப்போது கைதாகியுள்ளார்.
முன்னதாக வெடித்த மக்கள் புரட்சியால் ராஜபக்ஷேவின் மொத்த குடும்பமும் நாட்டை விட்டு தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.