Latestவிளையாட்டு

தாயின் வருகையால் நனவான உலகக் கிண்ண இலட்சியம்: Cape Verde கோல்காவலர் Vozinha நெகிழ்ச்சி

மயாமி, ஜூன்-20 – உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில், ஸ்பெயின் அணிக்கு எதிராக அசாத்திய திறமையை வெளிப்படுத்தி கால்பந்து உலகையே வியப்பில் ஆழ்த்திய Cape Verde அணியின் 40 வயது கோல்காவலர் Vozinha-வின் அடுத்த கனவு நனவாகியுள்ளது.

​ஸ்பெயின் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் Vozinha, 7 அபாரமான கோல் தடுப்புகளை மேற்கொண்டு ஆட்டநாயகன் விருது வென்றபோது, அவரது தாயார் அரங்கில் இல்லை.

உலகமே பாராட்டிய தனது மகனின் அந்த வரலாற்றுச் சாதனையை அவர் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு மகிழ்ந்தார்.

​இந்நிலையில், Cape Verde அடுத்த ஆட்டத்தை நேரில் காண்பதற்காக, Vozinha-வின் தாயார் Ana Candida Evora தற்போது அமெரிக்காவின் Atlanta நகர் சென்றடைந்துள்ளார்.

முதல் ஆட்டத்திற்குப் பிறகு, உடன் தாய் இல்லையே என Vozinha கண்ணீருடன் கூறிய நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை Ana Candida-வுக்கு விசா வழங்கியுள்ளது.

​கால்பந்து உலகின் மிக உயரிய மேடையில், தனது தாயின் முன்னிலையில் களமிறங்க வேண்டும் என்ற Vozinha-வின் நீண்ட நாள் உலகக் கிண்ண இலட்சியம் இதன் மூலம் தற்போது நனவாகியுள்ளது.

இது, நாளை உருகுவேவுக்கு எதிராக களமிறங்கவுள்ள Cape Verde அணியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் கூடுதல் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!