
பாங்காக், மே-22-தாய்லாந்தின் மக்காசான் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், ரயில் மோதி படுகாயமடைதுள்ளார்.
சம்பவத்தை நேரில் கண்டவர் கூறுகையில், சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள் எச்சரித்தபோதும், அவர் அங்கிருந்த நகரவில்லையாம். மேலும் ரயிலிலிருந்தும் எச்சரிக்கை ஹார்ன் அடித்தபோதும் அவ்வாடவர் ஒன்றும் நடக்காததுபோல இருந்துள்ளார்.
ரயிலிலிருந்து மோதப்பட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்றியபோதே அவ்வாடவர் காதில் இயர்பீசும் தலையில் தலைக்கவசமும் அணிந்திருந்ததால் சுற்றியிருந்தவர்களின் எச்சரிக்கையை உணரவில்லை என்பது தெரியவந்தது.



