
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்- 3,
தாய்லாந்து சுங்கை கோலோக் பகுதியில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்தில் அச்சந்தேக நபர் தன்னார்வமாக சரணடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆடவனுக்கு தாய்லாந்து மற்றும் மலேசியா என இரட்டை குடியுரிமைகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சுங்கை கோலோக்கிலுள்ள வீடொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 18 துப்பாக்கி குண்டுகள் தாக்கியதால் மலேசிய நபர் கடுமையாக காயமடைந்து, சுங்கை கோலோக் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று கொண்டிருக்கும்போதே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னாள் கிளாந்தான் கால்பந்து வீரர் என்றும் வழக்கு விசாரணை தற்போது தாய்லாந்து அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது என்றும் கிளாந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசுப் மாமாட் (Mohd Yusoff Mamat) தெரிவித்தார்.



