
பேங்கோக், ஏப்ரல்-10, தாய்லாந்தின் பிரபல Hat Yai நகரில் நகைக்கடை ஒன்றில் 1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில், மலேசியாவைச் சேர்ந்த வயதான ஆடவர் கைதாகியுள்ளார்.
நகைகளோடு பேங்கோக்கிற்கு கம்பி நீட்டிய 61 வயது அவ்வாடவர், Nonthaburi மாவட்டத்திலுள்ள தனது மகன் வீட்டுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.
Hat Yai-யிலிருந்து பேருந்து வழியாக பேங்கோக்கிற்கும் பின்னர் அங்கிருந்து டாக்சி ஏறி Nonthaburi-க்கும் அவர் சென்றுகொண்டிருந்தார்.
துப்புத் துலக்கிய தாய்லாந்து போலீஸ், அந்த டாக்சி பயணத்தின் போது அவரைக் கையும் களவுமாகப் பிடித்தது.
தங்க நகைகள், ஒரு கைத்துப்பாக்கி, உயிருள்ள தோட்டாக்கள் ஆகியவையுவும் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர், தாய்லாந்து சட்டப்படி நடவடிக்கைக்கு ஆளாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று Plaza Hat Hai பேரங்காடியில் இருந்த நகைக் கடையை, கைத்துப்பாக்கி முனையில் அவர் கொள்ளையிட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.