
சென்னை, பிப்ரவரி-27,தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் விசுவாசியுமான OPS எனப்படும் ஓ. பன்னீர்செல்வம், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்துள்ளார்.
அண்மையக் காலமாகவே திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த அவர், அக்கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட OPS, தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன், மகன் பி. ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோருக்கும் கட்சித் தலைமையகத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
OPS-சின் வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணிக்கு பெரும் பலம் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்துவிட்டு எதிர்முகாமில் இணைந்திருப்பதால், அவரின் செல்வாக்கு சரியலாம் என்றும் கூறப்படுகிறது.



