
பாலி, செப்டம்பர் -7 – இந்தோனீசியா, பாலியில் நடைபெற்ற 2024 அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சிலாங்கூர் செமன்ஞே தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 2 தங்கப் பதங்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
அதோடு சிறந்த படைப்பாற்றலுக்கான விருதையும் வென்று நாட்டுக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.
கொரியா, தாய்லாந்து, எகிப்து போன்ற நாடுகள் பங்கேற்ற ஓர் அனைத்துலகப் போட்டியில் நமது மாணவர்கள் வெற்றிகளைக் குவித்து திரும்பியிருப்பது குறித்து தலைமையாசிரியர் கு.நெடுஞ்செழியன் பெருமிதம் தெரிவித்தார்.
மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
கடந்தாண்டு முதன் முறையாக அப்போட்டியில் பங்கேற்ற செமன்ஞே தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், 2 தங்கம் 1 வெள்ளிப் பதக்கங்கங்களோடு 2 சிறப்பு விருதுகளையும் வென்றனர்.
இப்படி அடுத்தடுத்து அனைத்துலக அரங்கில் வெற்றிகளைக் குவித்திருப்பதன் மூலம், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டுமொரு முறை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.