
கோலா திரெங்கானு, செப்டம்பர் -23,
இன்று அதிகாலை திரெங்கானு பின்ஜாய் கிராமத்தில் ஆண் சூரியக் கரடி ஒன்று (Sun Bear) வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையினரிடம் (PERHILITAN) சிக்கியதில் அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.
சுமார் இரண்டு வாரங்களாக இந்தக் கரடி மக்களின் வீடுகள் மற்றும் பண்ணை பகுதிகளில் சுற்றித் திரிந்ததால், அங்குள்ளவர்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வாழ்ந்தனர்.
புகார் கிடைத்ததும், கடந்த ஒரு வாரமாக வலை கண்ணி அமைக்கப்பட்டு இன்று காலை 2 மணியளவில்தான் கரடி கண்ணியில் சிக்கியது என்று மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையின் (PERHILITAN) இயக்குநர் லூ கீயான் சியோங் கூறினார்.
விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கரடிகள் அச்சுறுத்தலிலேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக இப்பகுதியில் மூன்று சூரியக் கரடிகள் சுற்றி வந்தன எனவும் PERHILITAN துறையினர் கூண்டை அமைத்த பிறகு, அவற்றின் வருகை குறைந்துவிட்டது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தற்போது பிடிபட்ட சூரியக் கரடி நல்ல உடல்நிலையில் இருக்கின்றதெனவும் விரைவில் அதன் இயற்கை வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.