
கோலாசிலாங்கூர் – ஆகஸ்ட் 20 – தெலுக் இந்தான் சாலையில் கோலா சிலாங்கூர் பாலத்திற்கு அருகே இன்று கார் ஒன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து சாலை பயணர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். புரோடுவா கெலிசா கார் 90 விழுக்காடு எரிந்தபோதிலும் அதன் ஓட்டுநர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து இன்று பிற்பகல் மணி 1.44 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் ஐந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக் பிரிவுக்கான உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். தீக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.