
சிரம்பான், ஜூன் 5 – துங்கு பெசார் தம்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், இன்று காலை Dewan Keadilan மற்றும் Undang மன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டம் நடைபெற்றபோது பல முக்கிய பிரமுகர்கள் பிரதான வாயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
முக்கிய பிரமுகர்கள் அதிகாரப்பூர்வ இல்லப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது காலை மணி 9.30 அளவில் இந்தக் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
Undang Luak Johol, Datuk Muhammed Abdullah, Undang Luak Jelebu, Datuk Maarof Mad Rashad , Datuk Undang Luak Rembau, Datuk Abd Rahim Yassin மற்றும் Datuk Syahbandar Sungei Ujong, Datuk Seri Utama Badarudin Abdul Khalid ஆகியோர் பிரதான வாயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலவையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ரய்ஸ் யாத்திமும் அங்கு இருந்தார். Tunku Besar Tampin,Syed Razman Syed Idrus Al-Qadri பிரதான வாயிலுக்கு வந்து , கதவை திறக்குமாறு உத்தரவிட்டபோது அங்கு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை தணிந்தது.



