
கோலாலம்பூர், ஜனவரி 12 – தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள Yala, Narathiwat, Pattani ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதல்களால், இதுவரை எந்த மலேசிய குடிமக்களும் பாதிக்கப்படவில்லை என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அவசரநிலைகளில் விரைந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் தங்களின் இருப்பிட விவரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உதவி தேவைப்படும் மலேசியர்கள், Songkhla- விலுள்ள உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை தொடர்புக்கொள்ளலாம்.
மேலும், நிலைமையை மலேசிய வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், தேவையான சமயங்களில் புதிய தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.



